sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026 12:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தி.மு.க., முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்: துாத்துக்குடி மாவட்டத்தில் த.வெ.க., பெண் நிர்வாகியை, அந்த கட்சியின் இரண்டு நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தும், அதை பற்றி யாரும் கேட்கவில்லை. தொகுதி மாறி சென்று நன்றி தெரிவிக்கும் அமைச்சர் ஸ்ரீநாத் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

டவுட் தனபாலு: உங்க கட்சியில் வாரிசு அரசியல் கொடிகட்டி பறக்குது... உங்க அப்பா பெரியசாமியிடம் அரசியல் கத்துக்கிட்டு நீங்க வந்தீங்க... த.வெ.க., அமைச்சர்கள் எல்லாம் ஆட்சி நிர்வாகத்துக்கு புதியவர்கள் என்பதால, இந்த மாதிரி ஆரம்பகட்ட குளறுபடிகளை தவிர்க்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தமிழக வெற்றிக் கழக தலைவரான முதல்வர் விஜய் போலவே, வார இறுதியில் ஒரு, 'மீட்டிங்' இரண்டு அறிக்கை என அரசியல் செய்ய, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், 'முதல்வர் விஜய் மேற்கொண்ட அரசியலை உதயநிதியும் செய்ய ஆசைப்படுவது, கட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணத்தை உதயநிதி மேற்கொள்ள வேண்டும். ஆளுங்கட்சிக்கு எதிராக தினசரி அரசியல் செய்தால் தான், தோல்வியில் இருந்து தி.மு.க., மீளும்' என, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

டவுட் தனபாலு: சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., தலைவர்கள் வேகாத வெயில்ல ஊர் ஊரா போய் முழங்கியும், ஆட்சியை தக்க வச்சுக்க முடியலையே... நாலஞ்சு கூட்டங்கள்ல மட்டுமே பேசிய விஜய், ஆட்சிக்கு வந்துட்டார்... அவரை பார்த்து, உதயநிதி அரசியல் முடிவுகளை எடுப்பது, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மாறிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: என்னை என்றும் இயக்கும் தலைவர் கருணாநிதி தான். வெற்றியை தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனை கடல்களை சோர்வின்றி நீந்தி கடந்த அவரது ஆற்றல், என்னிடமும் இருக்கிறது. மீண்டும் வெற்றி சரித்திரத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால், தமிழகத்தை சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்.

டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., இருந்தப்ப, 13 வருஷங்களா எதிர்க்கட்சியாக இருந்தும், தி.மு.க.,வை உயிர் துடிப்புடன் வைத்திருந்தவர் கருணாநிதி... அவருக்கு சோதனையாக எம்.ஜி.ஆர்., இருந்தார் என்றால், உங்களுக்கு விஜய் வந்துட்டாரு... இதைத்தான், 'வரலாறு திரும்புது'ன்னு சொல்வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us