தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

3


PUBLISHED ON : ஜூலை 08, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: சந்தர்ப்பவாதிகளும், துரோகிகளும் அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேறியுள்ளனர். த.வெ.க., அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை பொருட்படுத்தாத முதல்வர் விஜய், ஜனநாயக முறையில் அரசை விமர்சித்த தி.மு.க., - எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்ய உத்தரவிட்டது, பழிவாங்கும் நடவடிக்கை.

டவுட் தனபாலு: ஏற்கனவே, 'தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க பார்த்தாங்க' என்ற விமர்சனத்தை த.வெ.க.,வினர் வச்சிட்டு இருக்காங்க... இப்ப, அனிதா கைதுக்கு இவர் கண்டனம் தெரிவிப்பதை பார்த்தால், த.வெ.க.,வினர் குற்றச்சாட்டு உண்மைதானோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்துறாரே!

----

இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன்: லோக்பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக கவர்னர் அர்லேக்கர், 'மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, லோக்பவனை அணுகலாம். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய முயல்வோர், எந்த உதவி வேண்டுமானாலும் முறையிடலாம்' என குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாக உள்ளது. கவர்னரின் இந்த செயல், மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறல்.

டவுட் தனபாலு: மக்கள் பிரச்னைகளை தீர்க்கத்தானே முதல்வர், கவர்னர்னு பல பதவிகளை உருவாக்கியிருக்காங்க... 'கவர்னர் என்பவர், அவரது அரசு மாளிகையில் நல்லா துாங்கி ஓய்வு எடுத்துட்டு, மாநில அரசு அனுப்பும் பைல்களில் கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பினா போதும்'னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!

-----

தமிழக வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில் குதிரை பேரத்தை உருவாக்கியவர்களே தி.மு.க.,வினர் தான். 2006ல் நடந்த தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., - எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்தனர். பின், தி.மு.க.,வில் இணைந்த அவருக்கு தேர்தலில், 'சீட்' வழங்கினர். அ.தி.மு.க.,வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனையும் இதே முறையில் தான் தி.மு.க.,வில் சேர்த்தனர்.

டவுட் தனபாலு: இது மட்டும் இல்லை... தமிழகத்தில் இன்று இருக்கும் கட்சிகள் செய்த, செய்துட்டு இருக்கிற, இனிமே செய்யப் போற எல்லா தவறுகளுக்கும், தி.மு.க.,வினர் மட்டுமே முன்னுதாரணமா இருப்பாங்க என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us