தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : ஆக 03, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2026 12:33 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக மின் துறை அமைச்சர் நிர்மல்குமார்: கடந்த ஆண்டு கோடை காலத்தில், 11.50 லட்சம் பேருக்கு, மூன்று மடங்கிற்கு மேல் மின் கட்டணம் வந்துள்ளது. இந்தாண்டு, 9.60 லட்சம் பேருக்கு தான், அந்தளவுக்கு கட்டணம் வந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு, 2 லட்சம் பேருக்கு குறைவாகவே, மூன்று மடங்கு கட்டணம் வந்துள்ளது. அதனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'வாட்ஸாப்' தகவலை வைத்து மக்களை தேவையின்றி குழப்ப வேண்டாம்.



டவுட் தனபாலு: கோடை காலம் முடிந்தும் வறுத்தெடுக்கும் வெயிலால், 'ஏசி' விற்பனைக் கடைகளுக்கு மக்கள் படையெடுத்துட்டு இருக்காங்க... அதனால, அடுத்தடுத்த மாதங்கள்லயும், மின் கட்டணம் தாறுமாறா உயர்வதை தடுக்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ஜ., தமிழக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் விஷ விதையை, பிரிவினை விதையை விதைத்து, இளைஞர்களை எப்படி திசை திருப்பிக் கொண்டிருந்தனர் என்பதற்கு, தி.மு.க., - எம்.பி., ராஜாவின் பேச்சு உதாரணம். 'வந்தே மாதரம்' பாடலில், முஸ்லிம்களுக்கு எதிரான வரிகள் இருப்பதாக ராஜா சொல்கிறார். 'வந்தே மாதரம்' பாடலின் தமிழாக்கத்தை வெளியிடுகிறேன். அப்படி ஒரு வரி கூட, அந்தப் பாடலில் கிடையாது.

டவுட் தனபாலு: 'வந்தே மாதரம்' பாடலில் தங்களுக்கு எதிரான வரிகள் இருப்பதாக, எந்த முஸ்லிமும் சொன்ன மாதிரி தெரியலை... 'மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியா இருக்கோம்'னு சொல்ற தி.மு.க.,வினர் தான், இப்படி எல்லாம் விதண்டாவாத அரசியல் பண்ணிட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: பா.ஜ.,வின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.,வில் இருந்து விலகி, முன்னாள் தலைவர் அண்ணாமலையின், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பில் சேர்ந்தவர்கள் வகித்து வந்த பொறுப்புகளுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்கும்படி, மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

டவுட் தனபாலு: பா.ஜ.,வுக்கு தமிழகம் முழுக்க முறையான கட்டமைப்பே கிடையாது... சில மாவட்டங்கள்ல மட்டும் தான், அந்தக் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு இருந்துச்சு... இருந்த கொஞ்ச நஞ்சம் பேரும், அண்ணாமலை பின்னாடி போயிட்டாங்க... அதனால, பத்திரிகைகள்ல விளம்பரம் தந்து தான், இவங்க கட்சிப் பதவிகளுக்கு ஆள் தேடணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us