தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : செப் 24, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2026 01:31 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரதமர் மோடி: நீர் பாதுகாப்பு என்பது அனைவரின் பகிரப்பட்ட பொறுப்பு. அதற்கு வலிமையான அமைப்புகள், அறிவியல்பூர்வ தீர்வுகள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம். வருங்கால தலைமுறைக்கு நீரை பாதுகாக்க, மக்களின் பங்கேற்பு தேவை. பருவநிலை பாதிப்புகளில் இருந்து மீள, ஜல் ஜீவன் திட்டம், கங்கையை துாய்மைப்படுத்துதல், நீர் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் ஆகியவற்றின் வழியே, நீர் மேலாண்மையை கட்டியெழுப்பி வருகிறோம்.

டவுட் தனபாலு: தண்ணீரை சேமிக்கிறது மட்டும் போதாது; அதை அறிவியல் பூர்வமாக நிர்வகித்து, வருங்கால தலைமுறைக்கும் கிடைக்க செய்றது தான் உண்மையான நீர் மேலாண்மை என்பதில், 'டவுட்'டே இல்லை!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் பனை, தென்னை மரங்களில் இருந்து 'கள்' இறக்கி விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என, உயர் நீதிமன்றத்தில் அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உடலுக்குக் கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுவை அரசு விற்கிறது. இது முரண்பாடானது. கலப்படத்தைக் காரணம் காட்டாமல், 'கள்' மீதான தடையை நீக்கி, முறையான கண்காணிப்புடன் துாய கள் விற்பனையை அரசு முறைப்படுத்த வேண்டும். பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.



டவுட் தனபாலு: மேடைகள்ல, 'ஆட்சிக்கு வந்தா டாஸ்மாக்கை ஒரே நிமிஷத்துல மூடுவேன்'னு முழங்கிட்டு, இப்போ, 'கள்ளு கடையைத் திறங்க'னு சொல்றது என்ன மாதிரியான கொள்கைன்னு, 'டவுட்' தான் வருது!

பத்திரிகை செய்தி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி ராகுல், வரும் 2029 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 'மாணவர் குரல்' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அக்டோபர் முதல் வாரத்தில் தமிழகம் வர உள்ளார். இதையொட்டி, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில், ராகுலுடன் மாணவர்கள் கலந்துரையாடும் பிரமாண்ட நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: மாணவர்கள் குரலை கேட்கறது இருக்கட்டும். அதுக்கு முன்னாடி, சத்தியமூர்த்தி பவன்ல அடிச்சுக்கிற உங்க சொந்த கட்சி தலைவர்களோட 'குரல்' ராகுல் காதுல விழலையோன்னு, 'டவுட்' வருதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us