தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : செப் 27, 2026 01:03 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026 01:03 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மதுராந்தகம் தொகுதியில் தனக்கு ஓட்டு போட்ட மக்களை விற்று, உழைத்த நிர்வாகிகளை மறந்து, பணத்தாசையால் த.வெ.க.,வில் இணைந்த துரோகி மரகதம் குமரவேலுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். துரோகம் செய்யும் எண்ணம் இனி யாருக்குமே வரக்கூடாது. வெற்றி பெற்ற 12 நாட்களில் கட்சி மாறி துரோகம் செய்தவரை, ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான். இடைத்தேர்தலில் , த.வெ.க.,வை, 'டிபாசிட்' இழக்கச் செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: ஜெயித்த 12 நாட்களில் கட்சி மாறுவது துரோகம் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை... ஆனா, உங்களது முன்னாள் தலைவி ஜெயலலிதாவின் தோழி சசிகலா காலில் விழுந்து முதல்வர் பதவிக்கு வந்துட்டு, சசிகலாவையே யார்னு கேட்ட நீங்க, துரோகம் பத்தி பேசலாமா என்ற, 'டவுட்'டும் கூடவே வருதே!

பத்திரிகை செய்தி: தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 198 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. பிரசாரத்துக்கு மட்டும், 149.89 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்துக்கு, 2.66 கோடி ரூபாய்; கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பிரசாரம் செய்ய, 3.24 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டவுட் தனபாலு: சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதிக்கு மட்டும் சராசரியா 25 -- 30 கோடி ரூபாய் வரை தி.மு.க.,வினர் செலவழிச்சிருக்காங்க... தமிழகம் முழுக்க பிரசாரம் செய்த ஸ்டாலினுக்கு, 2.66 கோடி ரூபாயும், 'சீட்' கிடைக்காத விரக்தியில் வீட்டுக்குள்ளயே முடங்கிய கமலுக்கு, 3.24 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளதாக சொல்லியிருப்பதில் இருந்தே, இது நல்ல கணக்கு இல்லை என்பது, 'டவுட்' இல்லாம தெரியுதே!

பத்திரிகை செய்தி: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது, மாநில பொதுச்செயலர் அப்துல் காதர் ஆகியோர் சந்தித்து, இடைத்தேர்தலுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 'மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வோம்' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

டவுட் தனபாலு: தி.மு.க., கூட்டணியில் பல வருஷங்களா அங்கம் வகித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, த.வெ.க., முகாமுக்கு தாவிட்டதால, சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்குமோ, கிடைக்காதோன்னு தி.மு.க., தலைமை பயந்துட்டு இருந்துச்சு... அந்த பயத்தை இந்திய தேசிய லீக் கட்சி போக்கியிருக்குமா என்பது, 'டவுட்' தான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us