
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்குப் பின், போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விலக்கிக் கொண்டது தவறு' என, உயர் நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.ஒரு அதிகாரியையோ, போலீசையோகாலாகாலத்துக்கு தண்டித்துக்கொண்டே இருக்க முடியாது. ஆறுமாத காலத்துக்குப் பின், அந்த நடவடிக்கையை திரும்பப்பெற்றாக வேண்டும். அதை விட்டுவிட்டு, அவர்களை தண்டனையிலேயே வைத்திருக்கவேண்டும் என்றால், வேலையைவிட்டுதான் நீக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... எந்த தப்பு செய்தாலும், ஆறு மாதம் மட்டும் தான், 'சஸ்பெண்ட்'போன்ற தண்டனைகள்... அப்புறம்,பழையபடி வேலைக்கு திரும்பிடலாம்னு இருந்தால், 'ஆறு மாசம் ஓய்வு எடுக்கலாம்'னு நினைச்சே, அதிகாரிகள் தப்பு பண்ண கிளம்பிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சி தலைவர்திருமாவளவன்: அ.தி.மு.க.,வுடன்மீண்டும் கூட்டணி அமைக்க, பா.ஜ., பல முயற்சிகளை செய்கிறது. அ.தி.மு.க., முன்எடுக்கும் அனைத்து முயற்சிகளையும், பா.ஜ., முறியடித்து விடுகிறது. அ.தி.மு.க.,வைதனிமைப்படுத்தினால், வேறு வழியின்றி, பா.ஜ.,வுடன் தான் சேர்ந்தாக வேண்டும் என்ற நெருக்கடியை திட்டமிட்டே உருவாக்கி வருகிறது. அ.தி.மு.க., கட்சி பா.ஜ.,வுடன் போகப்போகிறதா அல்லது தனித்தன்மையை பாதுகாத்துக் கொள்ளப் போகிறதா என்பது, அவர்கள் முன் உள்ள சவால்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வுடன்நீங்களும் சேரமாட்டீங்க... பா.ஜ.,உடன் சேர்ந்தாலும், 'தனித்தன்மைபோயிடும்'னு பயமுறுத்துறீங்க...'ஆளாளுக்கு தனித்தனியா நின்றுஓட்டுகளை பிரித்தால்தான், தி.மு.க.,கூட்டணியால கரையேற முடியும்'னு கணக்கு போடுறீங்களோஎன்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி: தி.மு.க.,அரசில் அப்பா முதல்வர், மகன்துணை முதல்வர். இப்போது,கட்சியும் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வுக்காக உதயநிதி என்ன தியாகம் செய்தார்... பட்டினி கிடந்தாரா... தொண்டர்களுடன் எத்தனை நாள் ஊர் ஊராக சுற்றினார். 'ஏசி' ரூமில் தானே இவ்வளவு நாளாக இருந்தார்.
டவுட் தனபாலு: என்னங்க இப்படி கேட்குறீங்க... சினிமாவுலகதாநாயகனா நடிச்சு, கோடி கோடியா சம்பாதிச்சுட்டு இருந்தவர்,அதை ஒரே நாள்ல உதறித் தள்ளிட்டு, கட்சிக்கும், நாட்டுக்கும்சேவையாற்ற ஓடோடிவந்திருக்கார்... இதைவிட பெரிய தியாகம் வேற வேணுமா என்ற, 'டவுட்' வருதே!