PUBLISHED ON : நவ 26, 2024 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: வரும், 2026 தேர்தலில், தமிழக அரசியல் சூழ்நிலை என்பது, ஐந்து முனைபோட்டியாக இருக்கும். தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, போட்டி இருக்கும். லஞ்ச ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, போதை பொருட்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால், தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும்.தமிழகத்தில், 2026 தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என்பது மக்கள் முடிவு.
டவுட் தனபாலு: தமிழகத்தில், ஐந்து முனை போட்டி இருந்தால்,தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள்சிதறி, மீண்டும் அக்கட்சியேஆட்சிக்கு வரும் என்பதில்,'டவுட்'டே இல்லை... தி.மு.க.,வுக்குஎதிரான கட்சிகள் எல்லாம் ஒரு குடையின் கீழ் திரண்டால் மட்டுமே, ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன்: தமிழகம்முழுதும் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர் என, 80 லட்சம் ஓட்டுகள் உள்ளன. 'திண்டுக்கல்தொகுதியில், தபால் ஓட்டுகளில்,எனக்கு எத்தனை ஓட்டுகள் வந்துள்ளன என்று கேட்டேன்;ஒரு ஓட்டு கூட எனக்கு வரவில்லை' என்றனர். எவ்வளவு தெளிவாக இருக்காங்க பாருங்க...!
டவுட் தனபாலு: தி.மு.க., அரசை நம்பி ஏமாந்த அரசு ஊழியர்கள், அடுத்தமுறை உங்களுக்கு தான் ஓட்டு போடு வாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன்: அ.தி.மு.க., கள ஆய்வு கூட்டத்தில்பேசிய முன்னாள் அமைச்சர்திண்டுக்கல் சீனிவாசன், 'கூட்டணிக்கு வருவோர் பணம் கேட்பர்; சீட் கேட்பர்' என சொல்லி இருக்கிறார். அக்கட்சியிடம்யார் பணம் கேட்டனர் என்பதை,அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,விடம் யார் பணம் கேட்டாங்க என்பது ஒருபக்கம் இருக்கட்டும்...நீங்களும், இந்திய கம்யூ.,வும் தி.மு.க.,விடம் தலா, 15 கோடி ரூபாய் வாங்கியதாகவும் சீனிவாசன்சொல்லியிருக்காரே... அதுக்கானபதிலோ, விளக்கமோ தங்களிடம்இருக்குதா என்ற, 'டவுட்' வருதே!