
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர்சரவணன்: லோக்சபா தேர்தலில்,மதுரை தொகுதியில் மொத்தம்உள்ள 1,556 'பூத்'களில், 133ல்தான் அ.தி.மு.க., முன்னிலை வகித்தது. செல்லுார் ராஜு பொறுப்பில் விடப்பட்ட 966 பூத்களில், 60ல் மட்டுமே அ.தி.மு.க.,முன்னிலை வகித்தது. இதற்கு செல்லுார் ராஜு பதில் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி,சிலர் பேச முயன்று, அது மறுக்கப்பட்டது. ஏதோ, 'மேட்ச் பிக்சிங்' போல் முன்கூட்டியே திட்டமிட்டு கூட்டம் நடந்தது. கள ஆய்வில் பலர் சுதந்திரமாக கருத்து தெரிவிக்கவில்லை.
டவுட் தனபாலு: அவ்வளவு பெரிய வைகை அணையை, 'தெர்மாகோல்' போட்டு மூடிய, 'வில்லேஜ் விஞ்ஞானி' செல்லுார்ராஜுவுக்கு, கள ஆய்வுக் கூட்டத்தை சமாளிக்கும் வித்தை தெரியாதா...? நாளைக்கே விஜய்க்கு ஒரு பாராட்டு பதிவை ராஜு போட்டார்னா, பழனிசாமியேபதறிடுவார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் பேத்தி லலிதா: நான் வறுமையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். குடிசை மாற்று வாரியத்தில் வீடுகேட்டு, தஞ்சை கலெக்டரின் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தேன். இதுகுறித்து அறிந்தஅ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
டவுட் தனபாலு: 'தமிழையும்,தமிழறிஞர்களையும் திராவிடமாடல் அரசு போற்றி பாதுகாக்கிறது'ன்னு ஆளுங்கட்சியினர்தம்பட்டம் அடிச்சுக்குறாங்க... தமிழறிஞரின் பேத்தி வறுமையில்வாடியது, அவங்க பார்வைக்கு வரலையா... எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டியபழனிசாமியை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!
பத்திரிகை செய்தி: வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது தொடர்பாக, அ.தி.மு.க., சார்பில்மாநிலம் முழுதும் கள ஆய்வுக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் நடந்த கூட்டத்தில், 'பேச வாய்ப்பு அளிக்கவில்லை' எனக் கூறி, நிர்வாகிகள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர்; தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
டவுட் தனபாலு: அது சரி... கள ஆய்வுக் கூட்டங்கள், கலவரஆய்வுக் கூட்டங்களா உருமாறிட்டுவருதே... வெற்றிக்கு வியூகம் வகுக்க நடக்கும் கூட்டங்களே, அடுத்த தோல்விக்கும் அச்சாரம் போட்டுடுமோன்னு, 'டவுட்'டா இருக்கு!