PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

தமிழக முதல்வர் ஸ்டாலின்: சென்னையில் மழை நீர் தேங்கிஇருப்பதாகக் கூறுவது தவறானசெய்தி; மழைநீர் தேங்கவில்லை.மழை நிவாரண பணிகள் திருப்தியாக உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியைபொறுத்தவரை, அவருக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாகி விட்டது; அதை நாங்கள் மதிப்பதில்லை; கவலைப்படுவதும் இல்லை. எங்கள் வேலையை தொடர்ந்து செய்கிறோம். பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையும், அவசியமும்இல்லை.
டவுட் தனபாலு: உங்களை விரட்டி வேலை வாங்கவே, மக்கள்பழனிசாமியை எதிர்க்கட்சித் தலைவராக்கி அனுப்பியிருக்காங்க... அவருக்கு பதில் தர முடியாது என நீங்க மறுத்தால், அவருக்கு ஓட்டு போட்ட மக்களைமதிக்காம நடந்துக்குறீங்களோ என்ற, 'டவுட்' தான் வரும்!
பத்திரிகை செய்தி: கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்கோஷ்டி மோதல் விவகாரம்தொடர்பாக, ஜோதிமணி தலைமையிலான ஐந்து எம்.பி.,க்கள் குழு, அகில இந்தியகாங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமாரிடம் விசாரணை நடத்த, அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
டவுட் தனபாலு: அடடா... காங்கிரஸ்ல கலாட்டாக்கள் நடக்கிறது சகஜம் தான் என்றாலும்,இந்த மாதிரி விசாரணைக்கே எதிர்ப்பு தெரிவித்தால் என்ன அர்த்தம்...? விட்டால், 'மயூரா ஜெயகுமாரிடம் ராகுல், பிரியங்காதான் விசாரிக்க முடியும்'னு கூட சொல்வாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
சிவசேனா உத்தவ் அணிகட்சியின் எம்.எல்.ஏ., ஆதித்ய தாக்கரே: மஹாராஷ்டிரா தேர்தல்முடிவு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், மஹாயுதி கூட்டணியில் இன்னும்முதல்வர் யார் என்று முடிவு செய்யவில்லை; ஆட்சி அமைக்கஉரிமை கோரவில்லை. இது மஹாராஷ்டிராவையும்,அவர்களின் அன்புக்குரியதேர்தல் கமிஷனையும்அவமானப்படுத்தும் செயல்.
டவுட் தனபாலு: கடந்த 2019 சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் உங்க கட்சியும்ஜெயித்ததே... தேர்தல் முடிஞ்சதும்,முதல்வர் பதவி கேட்டு, உங்க தந்தை உத்தவ் தாக்கரே முரண்டு பிடிச்சதால, பல நாட்கள் வீணாகி, கடைசியில் ஜனாதிபதி ஆட்சி அமலானதை மறந்துட்டீங்களா... கூட்டணி யுகத்தில் இது போன்ற தாமதம் தவிர்க்க முடியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!