PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

தமிழக காங்., துணைத் தலைவர் ராம சுகந்தன்:அன்று ரஜினியின், பாபா படத்தைவெளியிட விடாமல், பா.ம.க.,வினர்பிரச்னை உண்டாக்கியபோது, ரஜினியை நானும், வன்னியர் சங்கத் தலைவர்கள் ஏ.கே.நடராஜன்,தீரன் போன்றவர்களும் சந்தித்துஆதரவு அளித்தோம். இன்று, அதேராமதாஸ் குடும்பத்தினர் ரஜினியைசந்தித்து, தங்களின் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்துள்ளனர். வாழ்க்கை ஒரு வட்டம்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியை எதிர்த்துதான், தமிழகத்துல தி.மு.க.,வையே அண்ணாதுரை துவங்கினார்... இப்ப,தி.மு.க.,வின் ஊதுகுழலாகவேஉங்க கட்சி மாறிடுச்சே... இதுவும்,வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உதாரணம்தான் என்றால், 'டவுட்'இல்லாம ஏத்துக்குவீங்களா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: ஏற்கனவே தி.மு.க., அரசின் ஊழல்களை தொகுத்து, இரு பைல்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, பைல்ஸ் - 3, வரும் 2025 துவக்கத்தில் வெளியிடப்படும். மாநில அரசு திட்டங்கள், எப்படி சில கட்சித் தலைவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு போனது என்பதும் அதில் வெளிப்படும். பைல்ஸ் - 3, தமிழக அரசை புரட்டிப் போடும் என்ற நம்பிக்கை உள்ளது.
டவுட் தனபாலு: இப்படித்தான், பைல்ஸ் 1, பைல்ஸ் 2 வெளியிடும்போதும், 'பில்டப்' கொடுத்தீங்க... ஆனா, எதுவும் நடக்கலை... புஷ்பா 2 படம் தந்த தாக்கத்தைக் கூட உங்களது பைல்ஸ்கள் தரலை என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மொத்தம் ஐந்து நாட்கள் வரை நடக்க வேண்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரை, இரண்டு நாட்களில் முடித்து விட்டனர். தமிழகத்தில்ஏராளமான பிரச்னைகள் உள்ளன.அனைத்து கட்சியினரும், மக்கள்பிரச்னைகளை பேச முடியவில்லை. பிரதான கட்சிக்கே, 10 நிமிடம்தான் ஒதுக்குகின்றனர்.தி.மு.க., அரசு வந்த பின்,மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கான வாய்ப்பு இல்லை.
டவுட் தனபாலு: நிறைய பிரச்னைகள் இருப்பதால் தானே,சட்டசபையை ரெண்டு நாள்ல முடிக்கிறாங்க... நிறைய நாட்கள்நடத்தி, நீங்க குற்றச்சாட்டுகளை அடுக்கிட்டே இருந்தால், பதில் தர முடியாது என்றுதான் இப்படிசட்டுன்னு ஆரம்பிச்சு, பட்டுன்னு முடிக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

