PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சுகாதாரதுறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: அ.தி.மு.க., சார்பில்வங்கிகளில் மொத்தம் 267.50 கோடி ரூபாய் உள்ளது. லோக்சபாதேர்தலில் கட்சி சார்பில், 23.50 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா தொழிற்சங்க நிலை வைப்பு நிதியாக, வங்கிகளில் 33.10 கோடி ரூபாய் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஓராண்டில் வட்டியாக 2.32 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
டவுட் தனபாலு: தி.மு.க.,வுல கூட்டணி கட்சியான கம்யூ.,க்களுக்கே தலா 15 கோடி ரூபாயை தேர்தல் நிதியா குடுத்திருக்காங்க...நீங்களோ மொத்தம், 23.50 கோடிரூபாய் மட்டும் செலவழிச்சா, எங்கஇருந்து எம்.பி.,க்கள் கிடைப்பாங்க... சட்டசபை தேர்தலிலாவதுகையை சுருக்காம தாராளம் காட்டுனா தான், ஆட்சி கனவு கைகூடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழகத்தில்பொதுப்பணி துறை துவங்கப்பட்டு, 154 ஆண்டுகளாகின்றன.காகிதமில்லா சேவைக்கு, பல்வேறுதுறைகளும் மாறி வரும் நிலையில்,இணையதளமே இல்லாமல் பொதுப்பணி துறை இயங்கி வருகிறது. இதற்கான பணி, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாகியும்இன்னும் இணையதளம் பயன்பாட்டிற்கு வரவில்லை.
டவுட் தனபாலு: அது சரி... தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறையே எங்க, எப்படி இயங்குதுன்னு யாருக்கும் தெரியல... அந்த துறையிடம், இணையதளம் உருவாக்குற பொறுப்பை ஒப்படைச்சா, ரெண்டுவருஷம் இல்ல, 20 வருஷம் ஆனாலும், பொதுப்பணி துறைக்குஇணையதளம் உருவாகுமா என்பது, 'டவுட்' தான்!
அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி: அடுத்த ஆண்டுதேர்தல் வர உள்ள சூழலில், எம்.ஜி.ஆர்., - ஜெ., பிறந்த நாளில், மாநிலம் முழுதும் சுவர்விளம்பரங்கள் எழுத வேண்டும்.இதை செய்ய, சில ஒன்றிய செயலர்களிடம் பண வசதி இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு உறுதுணையாக மாவட்டச் செயலர்கள், ஆட்சியில்,அதிகாரத்தில் பங்கு வகித்து, பதவி சுகத்தை அனுபவித்த நிர்வாகிகள், மனமுவந்து பொருளுதவி தர வேண்டும்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க., ஆட்சியில், நீங்களும் தான் அமைச்சர் பதவி சுகத்தை அனுபவிச்சீங்க... முதல் ஆளா முன்வந்து, இத்தனை கோடி ரூபாயை கட்சி நிதியா தர்றேன்னுஅறிவிச்சிருந்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டிஇருக்கலாம்!

