PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

நடிகை கஸ்துாரி: தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலையுடன்முக்கியமான விஷயங்கள் குறித்துவிவாதித்தேன். தி.மு.க., ஆட்சியைஅகற்றி, ஒரு புதிய காற்று தமிழகத்தில் வீச வேண்டும்என்றால், அதற்கு எல்லாரும்ஒருமித்த கூட்டணியாக இருந்து, தேர்தலை சந்திக்க வேண்டும்.
டவுட் தனபாலு: உழக்கில்கிழக்கு மேற்கு பார்த்த கதையாக,தமிழக எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு பக்கமா பிரிந்து நின்று தேர்தலை சந்தித்தால், 2026க்கு பிறகும் தமிழகத்தில் புதிய காற்று வீசுவது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட வேண்டும் என, நடிகர் விஜயை கட்சியின் முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்தொகுதியில் த.வெ.க., சார்பில்வேட்பாளரை நிறுத்துவது குறித்துதீவிர ஆலோசனையில் இருக்கும்விஜய், கட்சியின் செல்வாக்கு குறித்து அறிய, அவசர சர்வே எடுக்கச் சொல்லி இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
டவுட் தனபாலு: போன இடைத்தேர்தல்லயே, இளங்கோவனை ஜெயிக்க வைக்க, தி.மு.க., தரப்பு 100 கோடி ரூபாயை செலவழிச்சதா சொல்றாங்க... இம்முறை விஜயும்களமிறங்கிட்டா, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் காட்டில் பணமழை கொட்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
வி.சி., கட்சியில் இருந்து விலகியுள்ள ஆதவ் அர்ஜுனா: திருமாவளவன், என் மீது சிலவிமர்சனங்களை வைத்துள்ளார்.அதை, 'அட்வைஸ்' ஆகவே பார்க்கிறேன். அவரிடம் இருந்து கள அரசியலை நிறைய கற்றுள்ளேன். கொள்கை சார்ந்த அரசியலில், அவரை சார்ந்தே என் பயணம் இருக்கும்.நான் பா.ஜ.,வில் இணைய போவதாக தகவல் பரப்பப்படுகிறது. நான் யாருடன் இணைய போகிறேன் என்பதை விட, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தே தீவிரமாக யோசித்து வருகிறேன்.
டவுட் தனபாலு: திருமாவளவன்கொள்கைக்கும், பா.ஜ., கொள்கைக்கும் காத துாரமாச்சே...பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக இருக்க முடியுமா... அதனால்தான், 'தீவிர தாவல்' கொள்கையிலிருந்து பின் வாங்கிட்டீங்கங்கிறதுல 'டவுட்'டே இல்லை!

