PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: தமிழகத்தில், திராவிட கட்சிகள் இல்லாதகட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பார்க்கிறோம். மக்கள் புதுவித ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். வரும் 2026 தேர்தல்புதிய களமாக இருக்கும். பா.ஜ.,விடம் வலிமையான கூட்டணிஉள்ளது. கூட்டணிக் கட்சிகள் இணக்கமாக உள்ளன.
டவுட் தனபாலு: திராவிட கட்சிகள் ஆட்சியில், மக்கள் வெறுத்து போயிருப்பது என்னமோஉண்மை தான்... ஆயினும், அவங்களது வலுவான கட்டமைப்பை உடைக்கும் அளவுக்கு, தமிழகத்தில் இதுவரை எந்த கூட்டணியும் அமையலை... 2026 தேர்தலில் அப்படி ஒரு பலமான கூட்டணியைநீங்க அமைத்தாலே, பாதி வெற்றிதான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மா.கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யு.,தொழிற்சங்க பொதுச்செயலர் ஆறுமுக நயினார்: போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை மறுத்து, அநீதி இழைத்தது அ.தி.மு.க., அரசு. அந்த வஞ்சனையை தொடர்ந்து அமல்படுத்தி, மிகக் கடுமையானபொருளாதார வன்முறையை, ஓய்வூதியர்கள் மீது தி.மு.க., அரசு தொடுத்துள்ளது. அ.தி.மு.க.,- தி.மு.க., அரசுகளுக்கு இடையேஎந்தவித வேறுபாடும் இல்லை. இவ்விரு அரசுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராட அனைத்து தொழிலாளர்களும், ஓய்வூதியர்களும் முன்வர வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க கட்சியின்மூத்த தலைவர்களான சவுந்தரராஜன், பாலகிருஷ்ணன் போன்றவர்கள் நினைச்சா முதல்வரை உடனே சந்திக்க முடியுமே... அவங்க, இது சம்பந்தமா முதல்வரை பார்த்து பேசினா, பிரச்னை தீர்ந்துடுமே...அதுல, அவங்களுக்கு என்ன தயக்கம் என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு: ஆற்றுக்குள்கட்டப்படும் பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் பாலத்திற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள்பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆற்றுக்குள் உள்ள பாலங்கள் அதிக தண்ணீர் வருவதால் சேதமடைகின்றன. சமீபத்தில் ஆற்றுக்குள் அடித்து செல்லப்பட்டபாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை. எதிர்பாராதவிதமாகநீரில் அடித்துச் செல்லப்பட்டது.
டவுட் தனபாலு: அகண்ட பெரிய காவிரி ஆற்றில், 2,000 வருஷத்துக்கு முன்னாடி கரிகாலன் கட்டிய கல்லணைஇன்னும் அப்படியே இருக்குது... ஆனா, நீங்க கட்டிய பாலம் மட்டும் எப்படி இடிந்து விழுந்துச்சு...? உங்க இன்ஜினியர்கள் சரியா பிளான் போடலையா அல்லது 'டெண்டர்' எடுத்த கான்ட்ராக்டர் கவுத்துட்டாரா என்ற, 'டவுட்' தான் வருது!