PUBLISHED ON : டிச 31, 2024 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: திருவாரூர் திரு.வி.க.,அரசு கலைக் கல்லுாரி மாணவியர்மற்றும் பெண் பணியாளர்களுக்குபாலியல் ரீதியாக தொந்தரவுகொடுப்பதாக, துறைத் தலைவர்கள் மீது மாணவியர் புகார் அளித்திருக்கின்றனர். சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், திருவாரூர்அரசு கல்லுாரியில் எழுந்துஇருக்கும் இந்த புகார், தமிழகம்முழுதும் கல்லுாரிகளில் மாணவியரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
டவுட் தனபாலு: கல்வி நிலையங்களில் வலம் வரும் இதுபோன்ற காமுகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவங்களைஉடனுக்குடன் டிஸ்மிஸ் செய்தால்தான், பாலியல் தொல்லைகளைதடுக்க முடியும் என்பதில், 'டவுட்'டேஇல்லை!
பத்திரிகை செய்தி: தி.மு.க., அரசை கண்டித்து, தன்னை தானேசாட்டையால் அடித்துக் கொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர் பாண்டியம்மாளின் கணவரான தி.மு.க., உறுப்பினர் ராம்பிரகாஷ்,தன் தலையில் 150 முட்டைகளைஉடைத்து போராட்டம் நடத்தினார்.
டவுட் தனபாலு: போற போக்கை பார்த்தால், கம்பி மீதுநடப்பது, கையால நடப்பதுன்னுசர்க்கஸ்காரங்க பாணியில் போராட்டத்துல இறங்கிடுவாங்களோ...? எது, எப்படியோ... தலையில் முட்டை உடைச்சவருக்கு புத்தாண்டு பரிசா பதவி தேடி வரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக காங்., பொதுச்செயலர் அருள் அன்பரசு:முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது, அன்றைய அ.தி.மு.க., அரசு தமிழகத்தில் பொது விடுமுறை அறிவித்தது. மன்மோகன் சிங் தலைமையிலானகூட்டணி ஆட்சியில், தி.மு.க., இடம் பெற்றிருந்தது. தமிழகத்தில்தற்போது தி.மு.க., ஆட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் மறைவுக்கு பொது விடுமுறை அறிவிக்கவில்லை. இது, காங்கிரசாருக்கு மட்டுமில்லாமல்,தமிழக மக்களுக்கே மனவலியைகொடுத்துள்ளது.
டவுட் தனபாலு: 'வாஜ்பாய் ஆட்சியில் ஓராண்டு மட்டுமே அங்கம் வகித்த அ.தி.மு.க., நன்றிக்கடனை ஒரு நாள் விடுமுறை விட்டு, காட்டிடுச்சு... மன்மோகன் சிங் அரசுல 10 வருஷம் இருந்த தி.மு.க., 10 நாள் அரசு விடுமுறை விடணும்'னு கூட கேட்டாலும் கேட்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!