PUBLISHED ON : ஜன 01, 2025 12:00 AM

மத்திய தகவல் ஒலிபரப்பு துறைஇணை அமைச்சர் முருகன்: பிரபல மல்யுத்த வீராங்கனைக்குஅளிக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல், பில்கிஸ் பானு வழக்குகளில் பா.ஜ., ஏன் சாட்டையடி நிகழ்வோ, சிறப்பு விசாரணையோ மேற்கொள்ளவில்லை என கேட்கப்படுகிறது.அந்த வழக்குகளில், அந்தந்த மாநிலங்களில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது; உரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்.
டவுட் தனபாலு: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்திலும், குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கார்... வழக்கு விசாரணையும் நடக்குதே... மல்யுத்த வீராங்கனை மற்றும்பில்கிஸ் பானுவுக்கு நீதி கிடைக்கவும் நீங்க போராடிஇருந்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்: டில்லி சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,விடம் தொலைநோக்கு திட்டமோ, வேட்பாளர்களோ இல்லை. குறுக்கு வழிகளை பயன்படுத்தி,இந்த தேர்தலில் எப்படியாவதுவெற்றி பெற வேண்டும் என்று பா.ஜ., விரும்புகிறது. டில்லிமக்கள் துணையுடன் பா.ஜ.,வை தோற்கடிப்போம்.
டவுட் தனபாலு: டில்லியில்,2013ல் இருந்து நீங்க தான் தொடர்ந்து ஆட்சியில இருக்கீங்க...மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்திஇருந்தால், உங்களையே மீண்டும் தேர்வு செய்ய போறாங்க... அதை விடுத்து, அடுக்கடுக்கான இலவசங்களை அறிவித்து, தேர்தலை சந்திக்க நினைப்பது மட்டும் நேர் வழியா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: 'பெஞ்சல்' புயல்மற்றும் கனமழையால் மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தி.மு.க., அரசின்பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பால், பொங்கல்பண்டிகையை தமிழக மக்கள்விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், குறைந்தபட்சம் 2,000 ரூபாய் ரொக்கம்உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: 'மத்திய அரசு நிதி தராததால தான் நெருக்கடி'ன்னு அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்றாரே... மத்தியஅரசு கூட்டணியில் இருக்கும் நீங்க அங்க பேசி, நிதி வாங்கி தந்துட்டு, 2,000 ரூபாய் கேட்டால்,'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!

