PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 'லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம்' என சுற்றி சுற்றி வந்த மோடிக்கு, 250 தொகுதிகள்தான் கிடைத்தன. எதிர்காலத்தில்இந்த 250 கூட மோடிக்கு வராது. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும். நான் இருக்கும் வரை தி.மு.க., ஆட்சியை அகற்ற விடமாட்டேன்.
டவுட் தனபாலு: 'தனிப்பட்டதி.மு.க.,வால, சட்டசபை தேர்தல்ல ஜெயிக்க முடியாது... இண்டியா கூட்டணி தான் வெல்லும்' என்றும், 'நான் கூட்டணியில் இருந்து போயிட்டால், தி.மு.க.,வால ஜெயிக்க முடியாது' என்பதையும்தான், இப்படி சுத்திவளைச்சு சொல்றீங்களோ என்ற, 'டவுட்' தான்வருது!
*********
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை: மத்திய அமைச்சர்களை, தமிழக அமைச்சர்கள் சந்திக்கின்றனர்.ஆனால், கீறல் விழுந்த ரிகார்டு போல, 'மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை' என சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். எந்த திட்டத்திற்கு நிதி தரப்பட்டதோ, அந்த திட்டத்திற்குசெலவிட வேண்டும். மழைநீர்கால்வாய்களுக்காக 4,000 கோடிரூபாய் ஒதுக்கியதை என்ன செய்தனர் என்று தெரியவில்லை.செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக, மத்தியகணக்கு தணிக்கை அறிக்கை தெரிவிக்கிறது.
டவுட் தனபாலு: மழைநீர்கால்வாய் கட்டுங்கன்னு நிதி கொடுத்தால், அதை செய்யாம அசால்டா இருந்துட்டு, அப்புறம்வெள்ள நிவாரணம் குடுங்கன்னுகேட்டா எப்படி தருவாங்க...? வந்த நிதியை வம்படியா திருப்பிஅனுப்பிட்டு, வராத நிதிக்கு பழி போடுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
*********
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:வரும் 2026ல், தமிழகத்தில் நேர்மையான ஆட்சி அமைய வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க.,வினர் எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்கும்.நினைத்ததை சாதிக்க பா.ம.க.,வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அது சரி... மகனுக்கு மாநிலத் தலைவர் பதவி, பேரனுக்கு இளைஞர் அணிதலைவர் பதவின்னு குடும்பத்துக்கே பதவிகளை பங்குபோட்டுக்குறீங்க... உழைக்க மட்டும் தொண்டர்களை தேடுவதுசரியா என்ற, 'டவுட்' வருதே!
*********

