PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

தமிழக சட்டத்துறை அமைச்சர்ரகுபதி: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் செயலை தாங்க முடியாமல், உயர் நீதிமன்றமே அவர்கள் முகத்திரையைக் கிழித்து தொங்க விட்டுள்ளது. உயர் நீதிமன்றமே கண்டித்த பின்னும், அரசியல் சுயநலத்திற்காக, பாதிக்கப்பட்ட மாணவியின்எதிர்காலம் குறித்து கொஞ்சமும் கவலையின்றி நடந்து வருகிறார் பழனிசாமி.
டவுட் தனபாலு: இதே உயர் நீதிமன்றம்தானே, கள்ளக்குறிச்சிகள்ளச்சாராய சம்பவத்துல சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது... அதை ஏத்துக்காம, உச்ச நீதிமன்றத்துல அப்பீல் பண்ணி, அங்கயும், 'குட்டு' வாங்கிட்டு, இப்ப ஐகோர்ட் உத்தரவைக் கொண்டாடுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வந்து கொண்டே இருப்பதுபற்றி, காவல் துறையை கையில்வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மவுன சாமியாராக இருப்பது கண்டனத்திற்குரியது.பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில்ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்துலகைதான ஞானசேகரன், உங்க ஆட்சியிலும், 'கைவரிசை' காட்டியிருக்காரே... ஆள் கடத்தல்வழக்குல எல்லாம் சிக்கிஇருக்காரு... அப்பவே, அந்த வழக்குகளை துரிதமா நடத்தி, அவருக்கு தண்டனை வாங்கி தந்திருந்தா, இப்ப அண்ணா பல்கலை சம்பவம் நடந்திஇருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:வேங்கைவயல் சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள்; தஞ்சாவூர்அருகே சயனைடு கலந்த மதுவைக் குடித்து இருவர் இறந்த வழக்கில் ஒன்றரை ஆண்டுகள்; திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயகுமார் கொலை நடந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன. இவற்றில், இதுவரை குற்றவாளிகளை பிடிக்கவில்லை. தமிழக காவல் துறை முற்றிலும்செயலிழந்து விட்டது.
டவுட் தனபாலு: அரசுக்கு எதிராக, சமூக வலைதளங்கள்ல கருத்து பதிவிட்டா மட்டும், ராவோட ராவா கைது பண்ணிடுறாங்களே... இந்த வேகத்துல கால்வாசியை, மேற்கண்ட வழக்குகள்ல நம்ம போலீசார் காட்டிஇருந்தாலே, எப்பவோ குற்றவாளிகளை பிடிச்சிருக்கலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!

