sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

1


PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 22, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: கடந்த 2011ல், 1.20 லட்சம் கோடியாக இருந்த தமிழக பட்ஜெட், தற்போது 4.12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2021 - -22 நிதியாண்டில், 28.7 சதவீதம் கடன் பெறலாம் என மத்திய நிதிக்குழு நிர்ணயித்திருந்த நிலையில், 27.01 சதவீதம் மட்டுமே தமிழகம் பெற்றுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டும் நிதிக்குழு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட, குறைவாகவே கடன் பெற்றுள்ளோம்.

டவுட் தனபாலு: நிதிக்குழு, இந்த அளவுக்குள்ள கடன் வாங்கலாம்னு தான் சொல்லியிருக்கே தவிர, 'கடன் வாங்கியே தீரணும்'னு உங்களை கட்டாயப்படுத்தலையே... அவங்க விதிச்ச வரம்புல இருந்து, கிட்டத்தட்ட 1.5 சதவீதம் மட்டும் கம்மியா கடன் வாங்கிட்டு, இப்படி பெருமை பேசணுமா என்ற, 'டவுட்'தான் வருது!



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சமீபத்தில், தேசிய கட்சியின் மாநில தலைவர் ஒருவர், தங்களோடு கூட்டணி சேருமாறு நடிகர் விஜயை அழைத்துள்ளார். விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை, தயவு செய்து 10 சதவீதம் அளவுக்காவது, அந்த கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் மீது வையுங்கள் என, அறிவுரை கூறுவது என் கடமை.

டவுட் தனபாலு: கடந்த ரெண்டு லோக்சபா தேர்தல்களில், வடமாநிலங்கள்லயே ராகுலின் செல்வாக்கு எடுபடவில்லை என்பதை பார்த்துட்டு தானே, நேற்று கட்சி துவங்கிய விஜயை எல்லாம் கூட்டணிக்கு கூப்பிடுறாங்க... தமிழகத்துல தி.மு.க., ஆட்சிக்கு எதிரான அலை உருவானா, அதுல சிக்காம கரையேறவே, விஜய் என்ற படகை தேடுறாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!



தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: 'தி.மு.க., ஆட்சிக்கு, இன்னும் 13 அமாவாசைகள் தான் உள்ளன' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல், புறமுதுகிட்டு ஓடிய 23ம் புலிகேசிதான் பழனிசாமி. இன்னும், 100 பவுர்ணமிக்கு, ஸ்டாலினே முதல்வராக தொடர்வார் என்பதை, 2026ல் எதிர்க்கட்சித் தலைவர் உணர்ந்து கொள்வார்.

டவுட் தனபாலு: 'ஸ்டாலினே முதல்வராக தொடர்வார்'னு சொல்றீங்களே... அந்த பதவிக்கு தயாராகிட்டு இருக்கிற உதயநிதி தரப்பு, இதை எப்படி எடுத்துக்குமோ...? சீனியர் அமைச்சர் துரைமுருகனே, உதயநிதி அமைச்சரவையில் இடம்பிடிக்க ஆசைப்படுறாரு... உங்களுக்கு அந்த ஆசை இல்லையா என்ற, 'டவுட்' வருதே!








      Dinamalar
      Follow us