sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைகின்றன?

/

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைகின்றன?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைகின்றன?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைகின்றன?


ADDED : செப் 29, 2011 09:42 PM

Google News

ADDED : செப் 29, 2011 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான சட்டங்களும், பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக கூறுவதை ஏற்க முடியாது என்றும், அது குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொஞ்சம் அதிகரித்துள்ளது என்றும், பெண்களுக்காக பாடுபடும் தனியார் தொண்டு அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல வகை. கற்பழிப்பு, கடத்தல், பலாத்காரம், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுதல், வரதட்சணை கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட இனங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. பெண்களுக்கான குற்றங்களை குறைக்க, அரசு தரப்பில், பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மற்றொருபுறம், பெண்களுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம், விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2007ம் ஆண்டை ஒப்பிடுகையில், கடந்தாண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஓரளவிற்கு குறைந்துள்ளன. நடப்பாண்டில், இதுவரை 4,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இந்தாண்டு பெண்களுக்கான குற்றங்கள் மேலும், குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை கேட்டபோது, 'தமிழகத்தை பொறுத்த வரையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரதட்சணை கொடுமை, வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பு, கற்பழிப்பு போன்ற வழக்குகளில் எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை, அதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சட்டப்பூர்வமான அணுகுமுறை, உடனடி தீர்ப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை, பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றன' என்றார்.

ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீதான நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், குற்றங்கள் குறைகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், பெயரிட விரும்பாத, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது குறித்த விழிப்புணர்வு மட்டுமே கொஞ்சம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்காக, மற்ற நாடுகளை காட்டிலும், நம் நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை உபயோகப்படுத்துவது மிகவும் குறைவு. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us