தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/திருமணம் முடிந்ததும் வெட்டு, குத்து: மணமகள் பலி; மணமகன் 'சீரியஸ்'

திருமணம் முடிந்ததும் வெட்டு, குத்து: மணமகள் பலி; மணமகன் 'சீரியஸ்'

திருமணம் முடிந்ததும் வெட்டு, குத்து: மணமகள் பலி; மணமகன் 'சீரியஸ்'


ADDED : ஆக 08, 2024 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: திருமணம் நடந்த சில மணி நேரத்திலேயே தம்பதி இடையே நடந்த மோதலில் மணமகள் உயிரிழந்தார். மணமகன் கவலைக்கிடமானார். திருமண வீடு, இழவு வீடாக மாறியது.

கர்நாடக மாநிலம், தங்கவயல், கெம்பாபுரா அருகே தும்பரசனஹள்ளி என்ற கிராமத்தில்நவீன், 24,- லகிதாஸ்ரீ, 21 ஆகியோருக்கு நேற்று காலை திருமணம் நடந்தது. நேற்று மாலை இந்த தம்பதி, தனியறையில் இருந்துள்ளனர்.

அப்போது, இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு, உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.இருவரையும் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மணமகள் லிகிதாஸ்ரீ உயிரிழந்ததை உறுதி செய்தனர்.மணமகன் நவீன் கவலைக்கிடமாக உள்ளார். சம்பவ இடத்தில் எஸ்.பி., சாந்தராஜு விசாரணை நடத்தினார்.

பின், சாந்தராஜு அளித்த பேட்டி: மணமகன் நவீன் ஆந்திர மாநிலம், சந்துார் கிராமத்தை சேர்ந்தவர். மணமகள், தங்கவயல், பைனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர். இவர்களது திருமணம், நவீனின் சகோதரி மோனிகாவின் வீடு இருக்கும் சம்பரசன ஹள்ளியில் இன்று (நேற்று) காலை 7:30 மணிக்கு நடந்துள்ளது.

மாலை 5:00 மணி வரை இருந்துள்ளனர். சந்தோஷமாகவே இருந்துள்ளனர். மாலை 5:30 மணிக்கு பயங்கர கூச்சல், அலறல் கூச்சல் கேட்டுள்ளது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, மணப்பெண் தலை, கழுத்து ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டுடனும்; மணமகன் தலை, கை, தோள்பட்டைபகுதியில் வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளனர். நவீனுக்கு நினைவு திரும்பிய பிறகே, காரணம் தெரியவரும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us