sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ சேலம் அருகே ஏலியன் சித்தர் கோவில்

சேலம் அருகே ஏலியன் சித்தர் கோவில்

சேலம் அருகே ஏலியன் சித்தர் கோவில்


UPDATED : ஆக 02, 2024 01:34 PM

ADDED : ஆக 01, 2024 11:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2024 01:34 PM ADDED : ஆக 01, 2024 11:56 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், மல்லமூப்பம்பட்டி வழியில் மூலக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராமகவுண்டனுாரில் ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலை அதே பகுதியை சேர்ந்த சித்தர் பாக்யா என்ற லோகநாதன், 45, முக்கால் ஏக்கர் நிலத்தில் நிறுவியுள்ளார். சிவலிங்கத்தில் இருந்து பூமிக்கு அடியில், 11 அடி ஆழத்தில், அவரது குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமும் நித்ய பூஜை செய்தாலும் லிங்கம், சித்தர், முனிவருக்கு தேய்பிறை, வளர்பிறை பஞ்சமி திதியில், மாலை, 6:00 மணிக்கு பூஜை நடத்தி அன்னதானம் வழங்கப்படுகிறது.

லோகநாதன் கூறியதாவது:வேறு எங்கும் இல்லாதபடி சக்திதேவி, பார்வதிதேவி, சிவன் தெய்வங்கள் ஒருங்கிணைந்த லிங்கமாக நிறுவப்பட்டுள்ளது. சிவன் இரட்டை ஆருடை லிங்கமாக காட்சி தருகிறார். என் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் நிறுவப்பட்டன. இதுவரை ஏலியன் சித்தர் எங்கும் கிடையாது. இங்கு தான் நிறுவப்பட்டுள்ளது.

இக்கோவிலில் நான்முக முருகன், ஐந்து முக காளி, தாமரை மலர் பலிபீடம், கருங்கற்களால் இரட்டை கொடிமரம் நிறுவப்பட்டுள்ளன. ஜடாமுனி, காமதேனு, காலபைரவர், ராமர், மதுரை மீனாட்சி, நந்தி ஆகியவை நிறுவப்பட்டு வருகின்றன. 2021 டிசம்பர் முதல், கோவில் பணி நடக்கின்றன. திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும். தற்போது பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பணி நடந்து வருவதால் குறைந்த அளவே பூஜை நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு பின் அனைத்து வித பூஜை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us