தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ வற்றாத நீர் நிலைகளால் நிலத்தடடி நீர் பாதுகாப்பு உத்தரவாதம் மழைநீர் சேகரிப்பு மகிமை உணர்வோமா?

வற்றாத நீர் நிலைகளால் நிலத்தடடி நீர் பாதுகாப்பு உத்தரவாதம் மழைநீர் சேகரிப்பு மகிமை உணர்வோமா?

வற்றாத நீர் நிலைகளால் நிலத்தடடி நீர் பாதுகாப்பு உத்தரவாதம் மழைநீர் சேகரிப்பு மகிமை உணர்வோமா?


UPDATED : ஏப் 29, 2024 02:08 AM

ADDED : ஏப் 29, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2024 02:08 AM ADDED : ஏப் 29, 2024 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்;சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், கடும் கோடையிலும் கூட நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் அடுத்த சாமளாபுரம் பேரூராட்சியில், சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளங்கள் உள்ளன. நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள, செந்தேவிபாளையம் அணைக்கட்டில் இருந்து சாமளாபுரம் குளத்திற்கு தண்ணீர் வருகிறது. இக்குளம் நிரம்பியதும் உபரி நீர் பள்ளபாளையம் குளத்தை சென்றடைகிறது. பள்ளபாளையம் குளம் நிரம்பியதும் உபரி நீர் வழிந்து நொய்யலில் கலக்கிறது .

கடந்த ஆண்டு திருப்பூர் மேற்கு ரோட்டரி அறக்கட்டளை சார்பில் சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள் துார்வாரி சுத்தம் செய்யப்பட்டன. குறிப்பாக, பள்ளபாளையம் குளம் நன்கு துார்வாரி ஆழப்படுத்தப்பட்டு கரைகளும் பலப்படுத்தப்பட்டன.

இக்குளத்தின் மொத்த நீர் கொள்ளளவு 25 சதவீத அளவுக்கு உயர்ந்தது. நன்கு துார்வாரியதால் தேக்கப்படும் தண்ணீரும் நீண்ட நாட்களுக்கு வற்றாமல் தேங்கி இருக்கிறது.

10 கி.மீ., பாதுகாப்பு


சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்கள், சுற்றுப்பகுதியில் உள்ள 10 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளன.

அக்னி நட்சத்திர வெயிலுக்கு முன்பே வெப்ப அலை வீசிக் கொண்டிருக்கிறது. கடும் வறட்சி நிலவுவதால் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறையும் தலைதுாக்கியுள்ளது.

இருப்பினும், பள்ளபாளையம், சாமளாபுரம் குளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், இங்குள்ள சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சமாளிக்க முடிகிறது.

பெரும்பாலான விவசாய நிலங்கள் இறவை பாசனத்தை நம்பி இருக்கின்றன. குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்கப்படுவதால், சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகளும் அதிக தண்ணீர் வசதியுடன்காட்சியளிக்கின்றன.

வறட்சியை எதிர்கொள்ளலாம்


கோடைக்காலம் துவங்கி வெயில் சுட்டரிக்கும் நிலையிலும், கிணறுகளில் தண்ணீர் மட்டும் சிறிது மட்டுமே குறைந்துள்ளது. குளத்தில் தண்ணீர் தேக்கியதன் பயனாக கடுமையான கோடை வெப்பத்தையும் சமாளிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மழை காலத்தில், குளம், குட்டைகளில் தண்ணீரை தேக்குவதும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் முழு வீச்சில் செயல்படுத்தினால் மட்டுமே, கோடையால் ஏற்படும் வறட்சியை எதிர்கொள்ள முடியும் என்று, சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us