/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கிருஷ்ணகிரி காதலனை மணந்த போலந்து பெண்
/
கிருஷ்ணகிரி காதலனை மணந்த போலந்து பெண்
ADDED : மே 06, 2024 01:16 AM

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே குரியனப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ், 33, போலந்து நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றார். படிப்பை முடித்தவர், அமெரிக்காவின் வில்லனோவா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி துறையில் பணியாற்றி வருகிறார். கல்லுாரியில் படித்த போது, போலந்து நாட்டை சேர்ந்த எவலினா மேத்ரோ, 30, என்பவரை காதலித்தார்.
மூன்றாண்டுகளுக்கு பின், இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த மாதம் இருவரும் இந்தியா வந்தனர். பெண்ணின் பெற்றோர் வர முடியாத சூழ்நிலையில், இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
தமிழ் கலாசார முறைப்படி நடந்த திருமணத்தில் உறவினர்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதி மக்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.