/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பாட்டி, பேத்திக்கு பஸ்சில் 'ப்ரீ' 4 பறவைக்கு ரூ.444 கட்டணம்
/
பாட்டி, பேத்திக்கு பஸ்சில் 'ப்ரீ' 4 பறவைக்கு ரூ.444 கட்டணம்
பாட்டி, பேத்திக்கு பஸ்சில் 'ப்ரீ' 4 பறவைக்கு ரூ.444 கட்டணம்
பாட்டி, பேத்திக்கு பஸ்சில் 'ப்ரீ' 4 பறவைக்கு ரூ.444 கட்டணம்
ADDED : மார் 28, 2024 12:27 AM

பெங்களூரு :பெங்களூரில் இருந்து மைசூருக்கு அரசு பஸ்சில் பாட்டி, பேத்தி எடுத்துச் சென்ற நான்கு, 'லவ் பேர்ட்ஸ்'களுக்கு, கண்டக்டர், 444 ரூபாய் கட்டணம் வசூலித்தார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மகளிருக்கு இலவச பஸ் பயணம் எனும், 'சக்தி' திட்டம் மாநிலம் முழுதும் அமலில் உள்ளது.
இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன் பேத்தியுடன், மைசூரில் உள்ள மகள் வீட்டுக்கு நேற்று காலை 8:10 மணியளவில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் புறப்பட்டார். இவர்கள் இருவருக்கும் கண்டக்டர், 'ஜீரோ' கட்டண டிக்கெட் வழங்கினார்.
ஆனால், அவர்கள் கொண்டு வந்திருந்த நான்கு லவ் பேர்ட்ஸ்களுக்கும் தனித்தனி டிக்கெட் வாங்க வேண்டும் என்றார்.
அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டதால், ஒரு பறவைக்கு 111 ரூபாய் வீதம் நான்கு பறவைகளுக்கும் 444 ரூபாய் கட்டணத்தை கண்டக்டர் வசூலித்துள்ளார். டிக்கெட்டில் நான்கு பறவைகளுக்கு, 'குழந்தைகள்' என்ற பிரிவில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.ஆர்.டி.சி., விதிகளின்படி, அரசு பஸ்களில் பறவைகள், விலங்குகள் கொண்டு சென்றால், அவற்றுக்கும் டிக்கெட் எடுப்பது கட்டாயம்.