தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 4வது மனைவிக்காக 3வது தாரத்தின் நகையை திருடியவருக்கு 'செம மாத்து'

4வது மனைவிக்காக 3வது தாரத்தின் நகையை திருடியவருக்கு 'செம மாத்து'

4வது மனைவிக்காக 3வது தாரத்தின் நகையை திருடியவருக்கு 'செம மாத்து'


UPDATED : ஜூன் 22, 2024 05:46 AM

ADDED : ஜூன் 22, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2024 05:46 AM ADDED : ஜூன் 22, 2024 01:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டவிரோதமாக நான்கு திருமணங்கள் செய்து கொண்டவர், நான்காவது மனைவிக்கு கொடுக்கும் நோக்கில், மூன்றாவது மனைவியின் நகையை திருடினார். இதனால், மூன்றாவது மனைவியின் மகன், தந்தையை அடித்து, உதைத்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் பக்தவச்சலம், 55. இவர் முதலில் கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவருக்கு தெரியாமல் சாவித்ரியை இரண்டாவது திருமணம் செய்தார். அதன்பின், மூன்றாவதாக நாகரத்னம்மா என்பவரை திருமணம் செய்தார். எந்த மனைவியையும் விவாகரத்து செய்யவில்லை.

மூன்று மனைவிக்கும் தெரியாமல், சமீபத்தில் நான்காவதாக பத்மாவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

புது மனைவிக்கு தங்க நகை பரிசளிக்க விரும்பினார். இதற்காக, மூன்றாவது மனைவி நாகரத்னம்மாவின் 50 கிராமுக்கும் அதிகமான தங்க நகையை திருடிச் சென்று கொடுத்தார். இதையறிந்த நாகரத்னம்மாவின் மகன் ஜீவன், 18, கோபமடைந்தார்.

நேற்று காலை தன் தாயுடன் பத்மாவதி வீட்டுக்கு சென்ற ஜீவன், தந்தையை சரமாரியாக தாக்கினார்.

பக்தவச்சலம் தப்பியோட முயற்சிக்க, விடாமல் விரட்டிச் சென்று மகன் பின்னியெடுத்தார். தாயும், மகனும் சேர்ந்து பக்தவச்சலத்தை சாலைக்கு இழுத்து வந்து அடித்து, உதைத்தனர்.

பக்தவச்சலம் திருட்டுத் தனமாக நான்காவது திருமணம் செய்து கொண்டது குறித்து, மூன்றாவது மனைவி நாகரத்னம்மா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்; கணவரை மீட்டுத் தரும்படி வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், நான்காவது மனைவி பத்மாவதியும், தனக்கு கணவர் வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கிறார்.

இந்த இரண்டு பெண்களால், போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. பீன்யா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us