தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 5,00,000 ரூபாய்க்கு விற்பனையான 'ஜெயசிம்மா' ஆடு

5,00,000 ரூபாய்க்கு விற்பனையான 'ஜெயசிம்மா' ஆடு

5,00,000 ரூபாய்க்கு விற்பனையான 'ஜெயசிம்மா' ஆடு


UPDATED : அக் 25, 2024 02:45 PM

ADDED : அக் 25, 2024 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2024 02:45 PM ADDED : அக் 25, 2024 07:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் கூட, விளையாட்டில் ஜமாய்க்கின்றன. ஜல்லிக்கட்டு, கம்பாலா விளையாட்டுகளே இதற்கு உதாரணம். அதே போன்று கிடாக்களின் சண்டையும் கிராமங்களில் நடப்பதை காணலாம்.

பாகல்கோட் தெக்லி கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர், ஆடு வளர்க்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன், இவர் ஆட்டுக்கிடாவை 90,000 ரூபாய் கொடுத்து வாங்கினார். இதற்கு 'ஜெயசிம்மா' என்ற பெயரிட்டு வளர்த்தார். ஆட்டுக்கிடா சண்டைகளில் பங்கேற்க வைத்தார்.

பாகல்கோட் மட்டுமின்றி, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த சண்டையில் ஜெயசிம்மா பங்கேற்றுள்ளது. இதுவரை எந்த சண்டையிலும் தோற்றதே இல்லை.

இது போட்டியில் பங்கேற்கிறது என்றாலே, வெற்றி உறுதி. 50க்கும் மேற்பட்ட சண்டைகளில் பங்கேற்று, வெற்றி வாகை சூடியது.

ஜெயசிம்மாவை விலைக்கு வாங்க, நான், நீ என பலர் போட்டி போட்டனர்.

சமீபத்தில் தார்வாடை சேர்ந்த ஆர்.எக்ஸ்.ஒய்., என்ற நிறுவனத்தினர், 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சண்டைக்கு பயன்படுத்தப்படும் ஆடுகள், லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால், 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாவது, மிகவும் அபூர்வம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us