உள்ளடக்கத்திற்கு செல்ல

அலைபேசியில் வீடியோ பார்த்ததால் திசைமாறிய சிறுவன் வாழ்க்கை
அலைபேசியில் வீடியோ பார்த்ததால் திசைமாறிய சிறுவன் வாழ்க்கை
ADDED : ஏப் 04, 2026 07:17 AM

அ நிறம் | அளவு
நாகர்கோவில்: அலைபேசியில் வீடியோ பார்த்து கெட்டுப் போனதாக 80 வயது மூதாட்டி பலாத்கார வழக்கில் கைதான சிறுவன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் தனியாக வசித்து வரும் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த சம்பவத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் அலைபேசியில் வீடியோக்களை பார்த்து வந்த தவறான எண்ணத்தில் இப்படி நடந்து கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் மாணவர் தகவலில் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் அலைபேசியில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
