தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்

குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்

குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்


ADDED : அக் 03, 2025 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 03:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: கர்நாடகாவில், பச்சிளம் ஆண் குழந்தையின் வயிற்றில் கரு வளர்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குந்த்கோல் தாலுகாவை சேர்ந்த ஒரு பெண், இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனார். பிரசவத்துக்காக, ஹூப்பள்ளியின் அரசு சார்ந்த, 'கிம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செப்டம்பர் 23ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் தென்பட்டதால், 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றில், முதுகெலும்பு உள்ளே ஒரு கரு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தெளிவாக தெரிந்து கொள்ள, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

கிம்ஸ் மருத்துவமனை டாக்டர் ஈஸ்வர கசபி கூறியதாவது:

குழந்தைக்குள், ஒரு குழந்தை இருப்பது உலகிலேயே மிக அபூர்வமான விஷயம். இதை மருத்துவ மொழியில், 'கருவுக்குள் கரு' என அழைப்பர். இது, பச்சிளம் குழந்தையின் உடலுக்குள் ஏற்பட்ட இயல்பற்ற வளர்ச்சி.

உலகம் முழுதும் சில குழந்தைகளுக்கு மட்டும் இப்படி நடக்கும். குழந்தை பிறப்பதற்கு முன்பே, இந்த விஷயத்தை கண்டுபிடிக்கவில்லை. இத்தகைய குழந்தைக்கும், ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்த பின், அடுத்தகட்ட சிகிச்சை அளிக்கப்படும். குழந்தையின் தாய் ஆரோக்கியமாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us