தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/வீட்டுக்குள் சிறுத்தையை சிறை பிடித்த கில்லாடி நபர்

வீட்டுக்குள் சிறுத்தையை சிறை பிடித்த கில்லாடி நபர்

வீட்டுக்குள் சிறுத்தையை சிறை பிடித்த கில்லாடி நபர்


UPDATED : ஜூன் 26, 2026 07:29 AM

ADDED : ஜூன் 26, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2026 07:29 AM ADDED : ஜூன் 26, 2026 01:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மசினகுடி: நீலகிரி மாவட்டம், மசினகுடி, செல்வப்பா காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர், நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு, குடும்பத்தினருடன் வீட்டில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை விரட்டியது. நாய், வீட்டில் உள்ள ஓர் அறைக்குள் ஓடியது. சிறுத்தையும் தொடர்ந்து, அந்த அறைக்குள் சென்றது.

சுதாரித்த சிவக்குமார், உடனடியாக ஓடிச்சென்று, அந்த அறை கதவை மூடி, வெளிப்பக்கமாக தாழிட்டு, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

மசினகுடி வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடித்து, ஐந்து மணி நேர போராட்டத்திற்குபின், சிறுத்தையை, சீகூர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

தான் சிறைப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுத்தை, அறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், நாயை கொல்லாமல் விட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us