தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அயோத்தி ஸ்ரீராமருக்காக தயாராகிறது வெள்ளி கிரீடம்

அயோத்தி ஸ்ரீராமருக்காக தயாராகிறது வெள்ளி கிரீடம்

அயோத்தி ஸ்ரீராமருக்காக தயாராகிறது வெள்ளி கிரீடம்


UPDATED : ஏப் 15, 2025 06:58 AM

ADDED : ஏப் 15, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2025 06:58 AM ADDED : ஏப் 15, 2025 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு, அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில், 2 கிலோ எடையில் வெள்ளி கிரீடம் வழங்கப்பட உள்ளது.

அகில பாரத ஹிந்து மகாசபா திருப்பூர் மாவட்ட கிளை சார்பில், கடந்தாண்டு அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு, ஒன்றே முக்கால் கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட ராமர் பாதம் வழங்கப்பட்டது. இந்தாண்டு, ஸ்ரீராமருக்கு, 2 கிலோ வெள்ளி கிரீடம் வழங்க திட்டமிடப்பட்டது.

தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, அனுப்பர்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீராமருக்கு கிரீடம் தயாரிக்க முதற்கட்டமாக அரை கிலோ வெள்ளி வழங்கப்பட்டது. மாநில இளைஞரணி தலைவர் வல்லபை பாலா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் சதீஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவனத்தினரிடம் வெள்ளியை வழங்கினர்.

'வரும் 26ம் தேதி, திருப்பூருக்கு வரும் தேசிய தலைவர் சக்ரபாணி மகாராஜிடம், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்திய பின், வெள்ளி கிரீடம் ஒப்படைக்கப்படும்; பின், அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு வழங்கப்படும்' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us