உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 09, 2026 02:02 AM

அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை, மஜீத் சாலையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். இவரது மகன் ஹர்சித் ராஜலிங்கம். சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
மார்ச் 2ல் தமிழ் தேர்வு எழுத தந்தையிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றார். இவர், தேர்வுக்கு சென்ற சில மணி நேரங்களில், செந்தில்குமாருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தையை இழந்த சோகத்திலும், அனைத்து தேர்வுகளையும் தைரியமாக எதிர்கொண்டார்.
நேற்று வெளியான தேர்வு முடிவில், தமிழ் 99, ஆங்கிலம் 96, இயற்பியல் 95, வேதியியல் 96, கம்ப்யூட்டர் சயின்ஸ் 100, கணிதம் 96 என, மொத்தம் 582 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். மனம் தளராமல் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற இம்மாணவரை, ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டினர்.
