/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ரூ.50 செலவில் 100 கி.மீ., வாகனத்தில் செல்லும் வசதி: பள்ளி மாணவர் உருவாக்கிய மூன்று சக்கர வாகனம்
/
ரூ.50 செலவில் 100 கி.மீ., வாகனத்தில் செல்லும் வசதி: பள்ளி மாணவர் உருவாக்கிய மூன்று சக்கர வாகனம்
ரூ.50 செலவில் 100 கி.மீ., வாகனத்தில் செல்லும் வசதி: பள்ளி மாணவர் உருவாக்கிய மூன்று சக்கர வாகனம்
ரூ.50 செலவில் 100 கி.மீ., வாகனத்தில் செல்லும் வசதி: பள்ளி மாணவர் உருவாக்கிய மூன்று சக்கர வாகனம்
ADDED : ஜன 24, 2026 02:10 AM

போடி: தேனி மாவட்டம், போடியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர் பாலகிருஷ்ணன் 14, என்பவர் ரூ. 50 செலவில் 100 கி.மீ., தூரம் செல்லும் வகையில் மாற்றுத் திறனாளி களுக்காக வாகனத்தை காட்சிப்படுத்தினார்.
போடி அருகே சிலமலை மெயின் ரோட்டில் டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் சின்னச்சாமி மகன் பாலகிருஷ்ணன். ராயப்பன் பட்டி எஸ்.யூ.எம்., மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில் தந்தையின் ஒர்க் ஷாப்பில் உதவியாக இருப்பதுடன் டூவீலர் இன்ஜினை பிரித்து பழுது பார்க்கும் பணியினை திறம்பட செய்வார்.
இவர் பழைய டூவீலர், எஞ்சின் உதிரி பாகங்கள் ஆகியவற்றின் மூலம் மாற்றுத்திறனாளிக்காக மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கி உள்ளார். இதில் எரிபொருளாக 50 மில்லி தண்ணீரில் 100 கிராம் சோடியம் கலப் பதன் மூலம் ஏற்படும் வேதியல் மாற்றத்தால் 10 கி.மீ., தூரம் வாகனம் செல்லும் வகையில் இயக்கி சாதனை படைத்து உள்ளார்.
பாலகிருஷ்ணன் கூறியது: வீட்டில் தாத்தா வைத்து இருந்த பஜாஜ் டூவீலரின் பழைய எஞ்சின், பாட்டி வைத்து இருந்த தள்ளு வண்டி, ஒர்க் ஷாப்பில் இருந்த உதிரி பாகங்கள், தள்ளு வண்டியில் இருந்த பலகைகள், பழைய இரும்பு கடையில் வாங்கிய ஸ்டேரிங் மூலம் எளியமுறையில் மாற்றுத் திறனாளிக்காக மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கினேன்.
வாகனத்தில் அமர்ந்து செல்பவர்கள் மேடு பள்ளத்தில் கீழே விழாமல் இருக்க இரண்டு ஷாக்கப்சார்பர் பொருத்தி உள்ளேன். ரூ.50 விலையுள்ள ஒரு கிலோ சோடியத்தை 2 லிட்டர் தண்ணீரில் கலப்பதால் வெப்பத்தில் வேதிமாற்றம் மூலம் சோடியம் ஹைட்ராக்சைடு, ஹைட்ரஜன் வாயு உருவாகிறது.
வாகனத்தை ஸ்டார்ட் செய்தவுடன் என்ஜின் அருகே பொருத்தப்பட்ட ரப்பர் பைப் மூலம் சோடியம் ஹைட்ராக்சைடு, ஹைட்ரஜன் வாயு நேரடி யாக இன்ஜினுக்குள் செல்கிறது. எஞ்சின் உள்ளே இருக்கும் பிஸ்டன் இயங்குவதால் உந்து சக்தி ஏற்படுகிறது. இதன் மூலம் 40 கி.மீ., வேகத்தில் 100 கி.மீ., தூரம் செல்லலாம்.
ஹைட்ரஜன் வாயு மூலம் வாகனம் இயக்கப்படுவதால் மாசு ஏற்படுவதை தவிர்க்கலாம். இந்த முயற்சிக்கு எனது பெற்றோர், பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், அறிவியல் ஆசிரியர் ஊக்கப்படுத்தினர் என்றார்.

