/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ஓடும் பஸ்சில் சக்கரம் கழன்றதால் பரபரப்பு
/
ஓடும் பஸ்சில் சக்கரம் கழன்றதால் பரபரப்பு
ADDED : பிப் 22, 2026 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசு பஸ், நேற்று பகல், 12:30 மணிக்கு, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றது. டிரைவர் செல்லபாண்டி பஸ்சை இயக்கினார்.
சீர்காழி அருகே, சேந்தங்குடி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து பஸ் இறங்கியபோது, 'பேரிங்' உடைந்து, பின்பக்க வலது பக்க இரு சக்கரங்கள் கழன்று ஓடின.
இதனால், பலத்த சத்தம் கேட்டதால், பயணியர் அச்சத்தில் கூச்சலிட்டனர். பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பயணியர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். பயணியர் இறக்கி விடப்பட்டு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

