தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 65 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி சாதனை

 65 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி சாதனை

 65 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி சாதனை


ADDED : ஜன 29, 2026 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டோக்கியோ: ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர், 65 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதற்காக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒசாகா நகரைச் சேர்ந்தவர் யாசுகோ தமாகி, 96. கடந்த 1930ம் ஆண்டு பிறந்த அவர், 1956ம் ஆண்டில், 'சன்கோ இண்டஸ்ட்ரீஸ்' என்ற வர்த்தக நிறுவனத்தில் அலுவலக மேலாளராக பணியில் சேர்ந்தார். தன் 26வது வயதில் பணியில் சேர்ந்த யாசுகோ தற்போதும் அந்நிறுவனத்தில் அதே பதவியில் நீடிக்கிறார்.

ஜப்பானில் தொழிலாளர் ஓய்வு வயது 60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1980களின் நடுப்பகுதியில் யாசுகோ அந்த மைல்கல்லை எட்டியும், அவரது பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டே வந்தது.

இதனால் ஒரே நிறுவனத்தில், ஒரே பதவியில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக அவரால் நீடிக்க முடிகிறது. இதை சாதனையாக அங்கீகரித்து, கடந்த 2020ம் ஆண்டே கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு அவரை உலகின் மிக வயதான அலுவலக மேலாளர் என்று சான்றளித்தது. அதையும் தாண்டி, தற்போதும் அதே நிறுவனத்தில், அதே பதவியில் அவர் நீடிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us