தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ புதிய கட்சி தொடங்கிய அஜித் ரசிகர்கள்

 புதிய கட்சி தொடங்கிய அஜித் ரசிகர்கள்

 புதிய கட்சி தொடங்கிய அஜித் ரசிகர்கள்

2


ADDED : செப் 21, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : செப் 21, 2026 04:15 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே நடிகர் அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

எலுவனாசூர்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், 'தமிழக மக்கள் கழகம்' அரசியல் கட்சியை அவர்கள் தொடங்கினர். கட்சியின் மாநில தலைவராக ஆபீத், செயலராக ராம்குமார், பொருளாளராக முகமது ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில், மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களின் நடுவே இரண்டு சிறுத்தைகள் இடம்பெற்றுள்ள வடிவத்தில், கட்சிக்கொடியையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர்.



மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆபீத் கூறியதாவது: 38 மாவட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து அரசியல் கட்சியை தொடங்கியுள்ளோம். மாற்று கட்சியினருக்கு போட்டியாகவோ, யாரையும் எதிர்க்கவோ கட்சி தொடங்கவில்லை. இதுவரை ரசிகர்களாக சேவை செய்து வந்த நாங்கள், இனி அரசியல் கட்சியாக சேவை செய்வோம். ஜாதி, சமயமற்ற சமூகநீதி, இயற்கை வளங்கள் பாதுகாப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, தமிழர் நலம், தமிழ் மொழி வளர்ச்சி ஆகியவையே எங்கள் கொள்கை. ஆதரவற்ற முதியோர், குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை அன்னதானம் வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us