sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

/

 கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

 கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

 கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி


UPDATED : பிப் 17, 2026 09:24 AM

ADDED : பிப் 17, 2026 06:01 AM

Google News

UPDATED : பிப் 17, 2026 09:24 AM ADDED : பிப் 17, 2026 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பத்ர காளியம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி பூஜையில் மூதாட்டி கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் சுட்ட அப்பங்களை அம்மனுக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார் பட்டி தெரு பத்ர காளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு மேல் முத்தம்மாள் 93, என்பவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பங்களை சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்வு நடந்தது.

இதில் அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து திருநீருடன் கலந்து மூதாட்டி முத்தம்மாள் தன் நெற்றியிலும் பிறகு பூசாரிகள் மற்றும் பக்தர்களுக்கும் பூசினார்.

பின்னர் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு அதனை கையால் எடுத்து பனை ஓலை பட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், இருளப்பன், முருகன் உடனிருந்தனர்.

அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அந்த அப்பங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us