/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
/
உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
ADDED : செப் 30, 2024 10:46 PM

சர்ஜாபூர் : ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், உயிருடன் புதைக்கப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின், கத்ரிகுப்பே தின்னே கிராமத்தில் வசிக்கும் மக்கள், அப்பகுதியில் திறந்தவெளியை இன்னும் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று காலை சிலர் திறந்தவெளி கழிப்பறைக்குச் சென்றபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடிப்பார்த்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை அரைகுறையாக உயிரோடு புதைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
குழந்தையை மீட்டு, பராமரித்த அப்பகுதியினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு தொம்மசந்திரா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு லேசான காயங்கள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குழந்தையை உயிருடன் புதைத்தவர்களை கண்டுபிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர். சர்ஜாபுரா போலீசார் விசாரிக்கின்றனர்.