தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அமைச்சர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த பெட்டிகள்

 அமைச்சர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த பெட்டிகள்

 அமைச்சர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த பெட்டிகள்


ADDED : ஏப் 08, 2026 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: அமைச்சர் சாத்துார் ராமசந்திரன் வீட்டில், போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் இருந்து பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனை சாலையில், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனின் வீடு உள்ளது. இந்த வீட்டின் முன், நேற்று மாலை ஒரு கன்டெய்னர் லாரி வந்து நின்றது. லாரியில் இருந்த பெட்டிகள் அனைத்தும், அமைச்சரின் வீட்டிற்குள், போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. பொங்கல் நேரத்திலும் இதே போல கன்டெய்னர் லாரி வந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அமைச்சர் வீட்டின் முன் நின்ற லாரியில் இருந்த இறக்கப்பட்ட பெட்டிகள் குறித்து எவ்வித சோதனையும் நடத்தவில்லை. பெட்டிகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பரிசு பொருட்கள் இருந்ததாகவும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அ.தி.மு.க, - பா.ஜ.,வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us