தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/சட்டையில் பட்டன் இல்லாத வாலிபருக்கு மெட்ரோவில் தடை

சட்டையில் பட்டன் இல்லாத வாலிபருக்கு மெட்ரோவில் தடை

சட்டையில் பட்டன் இல்லாத வாலிபருக்கு மெட்ரோவில் தடை


UPDATED : ஏப் 10, 2024 08:51 AM

ADDED : ஏப் 09, 2024 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 10, 2024 08:51 AM ADDED : ஏப் 09, 2024 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: சட்டையில் பட்டன் இல்லாமல் வந்ததால், மெட்ரோ ரயிலில் செல்ல வாலிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் முதியவர் ஒருவர், அழுக்கான உடை அணிந்து, ராஜாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையம் வந்தார். உடை அழுக்காக இருப்பதாக கூறி, ரயில் நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, தொட்டகல்லசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு, கூலி வேலை செய்யும் வாலிபர் ஒருவர், நேற்று மதியம் வந்தார். டிக்கெட் எடுத்துக் கொண்டு, ரயிலில் செல்ல நகரும் படிக்கட்டு அருகே வந்தார்.

அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லை. பட்டனை போட்டுக் கொண்டு, ரயிலுக்கு செல்லும்படி கூறினர்.அந்த வாலிபர், 'சட்டையின் பட்டன் அறுந்து விட்டது' என கூறினார். அவர் கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அவரை திருப்பி அனுப்பினர். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கு, 'டேக்' செய்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், மெட்ரோ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us