/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ராமேஸ்வரம் கடலில் நீந்தி ஆட்டிசம் சிறுவன் சாதனை
/
ராமேஸ்வரம் கடலில் நீந்தி ஆட்டிசம் சிறுவன் சாதனை
ADDED : அக் 10, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் லக்சய், 12. ஆட்டிசம் சிறுவனான இவர் நேற்றுமுன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றார்.அன்று மாலை 5:00 மணிக்கு அங்குள்ள கடற்கரையில் குதித்த லக்சய் நீந்தத் துவங்கினார்.
நேற்று மாலை 3:20 மணிக்கு ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். இவர் 56 கி.மீ.,யை 22 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.
இவர், அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வுக்கு பின் தொடர்ந்து நீந்தியதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மரியரோஜர் தெரிவித்தார்.

