/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
/
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
ADDED : டிச 17, 2025 12:03 PM

மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஆவுடையப்பன் மனைவி தேவமனோகரி 64, விபத்தில் மூளைச்சாவடைந்த நிலையில் அவரது உறுப்புகள் நான்கு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
தேவமனோகரி கடந்த டிச. 13 இரவு 7:35 மணிக்கு நடந்து செல்லும் போது டூவீலர் மோதியதில் காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் டிச. 14 ல் சேர்க்கப்பட்டு நேற்று அதிகாலை மூளைச்சாவு நிலையை அடைந்தார். மனைவியின் உறுப்புகளை தானமாக தர ஆவுடையப்பன் முன்வந்தார்.
கல்லீரல் திருச்சி அப்போலோ மருத்துவமனை, இரண்டு சிறுநீரகங்கள் திருச்சி காவேரி மருத்துவமனை, முருகன் ஹெல்த்கேருக்கும், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
டீன் அருள்சுந்தரேஷ்குமார், நிலைய மருத்துவ அலுவலர்கள் சரவணன், முரளிதரன் தலைமையில் மருத்துவமனை பணியாளர்கள், தேவமனோகரி உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

