தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஆஸ்திரேலியாவில் 34 ஆண்டுக்கு பின் முட்டையிட்ட கசோவரி தீக்கோழி

ஆஸ்திரேலியாவில் 34 ஆண்டுக்கு பின் முட்டையிட்ட கசோவரி தீக்கோழி

ஆஸ்திரேலியாவில் 34 ஆண்டுக்கு பின் முட்டையிட்ட கசோவரி தீக்கோழி

1


ADDED : அக் 23, 2026 01:35 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : அக் 23, 2026 01:35 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கான்பெரா : ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல உயிரியல் பூங்காவில், 34 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அரிய வகை கசோவரி தீக்கோழி முட்டையிட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான பறவைகளில் ஒன்று தீக்கோழி இனத்தைச் சேர்ந்த கசோவரி பறவைகள். தோற்றத்தை வைத்து டைனோசர்களின் நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் கசோவரிகள், ஆஸ்திரேலியாவின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை.

முட்டையிட்ட பின், பெண் பறவை சென்றுவிடும் நிலையில், ஆண் பறவையே முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளை வளர்க்கும் பொறுப்பை முழுதும் ஏற்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் உயிரியல் பூங்காவில் உள்ள மார்டினா என்ற 10 வயது பெண் கசோவரி, ஒளிரும் நியான் பச்சை நிறத்தில் ஒரு முட்டையை இட்டுள்ளது.

'பிலிவெர்டின்' என்ற நிறமி காரணமாக இந்த தனித்துவமான நிறம் ஏற்படுகிறது. காடுகளில் தரையில் கூடுகட்டும் போது, இந்த நிறம் முட்டைகளை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

இந்தப் பூங்காவில், 1992ம் ஆண்டுக்குப் பின், தற்போதுதான் கசோவரி பறவை ஒன்று முட்டையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us