/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சமையல்காரரின் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு
/
சமையல்காரரின் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு
ADDED : மார் 14, 2024 12:48 AM

புதுடில்லி, உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றுபவர் அஜய் குமார் சாமல். இவரது மகள் பிரக்யா, 25, சட்டப் படிப்பு முடித்துள்ளார்.
இவருக்கு, அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய இரண்டு பல்கலை களில் முதுநிலை சட்டப் படிப்பு படிக்க உதவித்தொகை கிடைத்துள்ளது.
இதற்காக பிரக்யா அங்கு செல்லவுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவரை வாழ்த்த நீதிபதிகள் முடிவு செய்தனர். இதன்படி நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் துவங்கும் முன், பிரக்யாவின் குடும்பத்தை தன் அறைக்கு அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கவுரவித்தார்.
அதன்பின், அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான மூன்று புத்த கங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.
அப்போது பிரக்யாவிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “அமெரிக்காவில் படித்து முடித்துவிட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும்,” என குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளும் பங்கேற்று, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

