தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/குப்பையில் கிடந்த 15 பவுன் உரியவரிடம் ஒப்படைப்பு: துாய்மை பணியாளருக்கு பாராட்டு

குப்பையில் கிடந்த 15 பவுன் உரியவரிடம் ஒப்படைப்பு: துாய்மை பணியாளருக்கு பாராட்டு

குப்பையில் கிடந்த 15 பவுன் உரியவரிடம் ஒப்படைப்பு: துாய்மை பணியாளருக்கு பாராட்டு


UPDATED : மார் 06, 2026 08:58 AM

ADDED : மார் 06, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 06, 2026 08:58 AM ADDED : மார் 06, 2026 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குப்பையில் கிடந்த 15 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த மாநகராட்சி துாய்மை பணியாளர் செல்வியை உதவி எஸ்.பி., பாராட்டினார்.

காரைக்குடி வேடன்நகர் மவுனகுரு மனைவி செல்வி 25. இவர் காரைக்குடி மாநகராட்சியில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தலைவாசல் பகுதியில் வீடு வீடாக குப்பைகளை சேகரித்துள்ளார்.

நேற்று முன்தினம் சேகரித்த குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது பர்ஸில் செயின், மோதிரம் என 15 பவுன் நகைகள் இருப்பதை அறிந்தார். இந்த நகைகளை உடனே காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைத்தார்.

இந்த நகைகளுக்கு சொந்தக்காரர் காட்டுதலைவாசல் தாஜ்தீன் என தெரிந்தது. அவரிடம் நேற்று உதவி எஸ்.பி., ஆஷிஸ் புன்யா முன்னிலையில் துாய்மை பணியாளர் செல்வி நகைகளை ஒப்படைத்தார். செல்வியை நகை உரிமையாளர், போலீசார் பாராட்டினர். பல்வேறு தரப்பினரும் செல்வியை பாராட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us