தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/வேலுார் கோட்டை கோவிலில் 'ரீல்ஸ்' எடுத்தவர்கள் மீது புகார்

வேலுார் கோட்டை கோவிலில் 'ரீல்ஸ்' எடுத்தவர்கள் மீது புகார்

வேலுார் கோட்டை கோவிலில் 'ரீல்ஸ்' எடுத்தவர்கள் மீது புகார்


ADDED : மார் 27, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார்: வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், தோழியுடன் நடனமாடி, 'ரீல்ஸ்' வெளியிட்டவர் மீது, ஹிந்து முன்னணியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வேலுார் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், வாலிபர் ஒருவர், தன் தோழியுடன் சினிமா பாடலுக்கு நடனமாடி, வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, சிவனடியார்கள், ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேலுார் வடக்கு போலீசில் ஹிந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.

புகாரில் கூறி இருப்பதாவது: தமிழகம் முழுதும் ஹிந்து கோவில்களில், சினிமா பாடலுக்கு நடனமாடி, ரீல்ஸ் வெளியிடும் கேடு கெட்ட கலாசாரம் பரவி வருகிறது. மன நிம்மதிக்காக கோவில்களுக்கு வரும் பக்தர்களை, இவ்வாறான விஷயங்கள் வேதனையை தருகிறது. எனவே, கோட்டை கோவிலில் அத்துமீறி நடனமாடிய பிரசாந்த் என்பவர் மீது வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனமுருகி வழிபடத்தான் கோவில்கள் உள்ளனவே தவிர, நடனமாடி ரீல்ஸ் வெளியிட இல்லை. ஹிந்து கோவில்களின் புனிதத்தை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us