தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

நெஞ்சு வலியால் தவித்த பயணியை இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்


ADDED : ஜன 19, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: நெஞ்சு வலி ஏற்பட்ட பயணியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர், 40 வயது நபர் கடந்த, 15ம் தேதி அரசு பஸ்ஸில்(தடம் எண் 1சி) பயணம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பஸ்ஸினுள் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இந்நிலையில், இவரை கண்டக்டர் ஆர்.எஸ்.புரத்தில் ரோடு ஓரமாக இறக்கி படுக்க வைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அப்பகுதியில் இருந்தவர்கள் அந்நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நெஞ்சுவலி ஏற்பட்ட நபரை பாதி வழியில் இறக்கி விடப்பட்டது குறித்து கோவை கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, கண்டக்டர் சரவணன், நெஞ்சு வலி ஏற்பட்ட நபர் மது அருந்தியிருந்ததாகவும், அதனால், அவரை இறக்கி விட்டதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் விசாரித்த போது பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கண்டக்டர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டிரைவர் ஈசனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us