காதல் திருமணம் செய்த தம்பதி போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு
காதல் திருமணம் செய்த தம்பதி போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 24, 2026 03:56 AM

அஞ்செட்டி: ஓட்டளிக்க சென்ற காதல் தம்பதி மீது, தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் ஓட்டளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அ ஞ்செட்டி அருகே சித்தாண்டபுரத்தை சேர்ந்தவர் மன்னார், 26; இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருத்திகா, 22, என்பவரும், 3 ஆண்டுகளாக காதலித்து, 2026 ஏப்ரலில் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்தனர். ஊருக்கு சென்றால், உறவினர்களால் பாதிப்பு வரும் என்பதால், ஓசூரில் வசிக்கின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்த நிலையில், தளி தொகுதிக்கு உட்பட்ட சொந்த கிராமமான சித்தாண்டபுரத்தில் ஓட்டுப்பதிவு செய்ய, மன்னார், கிருத்திகா நேற்று காலை ஊருக்கு சென்றனர்.
கிருத்திகாவின் தாய்மாமன்கள், ஓட்டளிக்க விடாமல் இருவரையும் தாக்கினர். காதல் தம்பதியை ஓட்டளிக்க விடாமல் தாக்கி விரட்டிய சம்பவம், மாவட்ட நிர்வாகம் வரை சென்றது.
இதையடுத்து, கலெக்டர் தினேஷ்குமார், போலீஸ் பாதுகாப்புடன், தம்பதி இருவரும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்தார். ஓட்டளித்த பின், இருவரும் ஓசூர் புறப் பட்டு சென்றனர்.
