sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

அரசு அலுவலகங்கள், பொது சுவர்களில் தினமலர் விழிப்புணர்வு வாசகங்கள்; ஜாபர் அலிக்கு மக்கள் பாராட்டு

/

அரசு அலுவலகங்கள், பொது சுவர்களில் தினமலர் விழிப்புணர்வு வாசகங்கள்; ஜாபர் அலிக்கு மக்கள் பாராட்டு

அரசு அலுவலகங்கள், பொது சுவர்களில் தினமலர் விழிப்புணர்வு வாசகங்கள்; ஜாபர் அலிக்கு மக்கள் பாராட்டு

அரசு அலுவலகங்கள், பொது சுவர்களில் தினமலர் விழிப்புணர்வு வாசகங்கள்; ஜாபர் அலிக்கு மக்கள் பாராட்டு


ADDED : பிப் 02, 2026 03:29 AM

Google News

ADDED : பிப் 02, 2026 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது சுவர்களில் திருக்குறள், தினமலர் நாளிதழில் வெளியிடப்படும் விழிப்புணர்வு வாசகங்களை தன்னார்வலர் ஜாபர் அலி எழுதி வருகிறார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சாயல்குடி பேரூராட்சி பகுதியிலுள்ள அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரம், திருமணம், காதணி, நினைவஞ்சலி உள்ளிட்ட போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் அரசு அலுவலக சுவர்கள் தனி நபர்களின் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறிவிடுகிறது. இதையறிந்த சாயல்குடியை சேர்ந்த பாத்திமா அறக்கட்டளை நிறுவனர் ஜாபர் அலி இந்த போஸ்டர்களை அகற்றி விட்டு விழிப்புணர்வு வாசகங்களை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஜாபர் அலி கூறியதாவது: சாயல்குடி நகரின் அழகை கெடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன. குறிப்பாக அரசு சுவர்களில் தன்னிச்சையாக ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு மாற்றாக புதிதாக வெள்ளை அடித்து அவற்றின் மீது திருக்குறள் எழுதி அதன் கீழ் விளக்கமும் தருகிறேன்.

மேலும் தினமலர் நாளிதழில் தினந்தோறும் இடம் பெறும் விழிப்புணர்வு வாசகங்களையும் சுவர்களில் எழுதி வருகிறேன். ஆர்.ஐ., அலுவலகம், அரசு தொடக்கப் பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதுடன் பாராட்டியும் வருகின்றனர்.

பிளக்ஸ் பேனர் மற்றும் போஸ்டர்களால் நகரின் அழகை கெடுக்க வேண்டாம். சுற்றுச்சூழல் மாசில்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us