தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அமைச்சர் மகேஷ் முன்பாக தி.மு.க., கவுன்சிலருக்கு 'பளார்'

 அமைச்சர் மகேஷ் முன்பாக தி.மு.க., கவுன்சிலருக்கு 'பளார்'

 அமைச்சர் மகேஷ் முன்பாக தி.மு.க., கவுன்சிலருக்கு 'பளார்'


UPDATED : ஜன 27, 2026 08:12 AM

ADDED : ஜன 27, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2026 08:12 AM ADDED : ஜன 27, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: அமைச்சர் மகேஷ் பங்கேற்ற விழாவில், தி.மு.க., கவுன்சிலரை, கன்னத்தில் அறைந்த சக கட்சி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலைய பகுதியில், 61வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அலுவலகத்தை திறந்து வைக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று வந்தார். அப்போது, கே.கே.நகர் பகுதி வர்த்தக அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், 45, அமைச்சர் மகேஷை ஒட்டி, இடிப்பது போல் நின்றுள்ளார். இதைப்பார்த்த, 61வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஜாபர் அலி, சண்முகசுந்தரத்தை தடுத்து நிறுத்தினார்.

இதில், ஆத்திரமடைந்த அவர், ஜாபர் அலி சட்டையை பிடித்து கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில், நிலைகுலைந்து போன ஜாபர் அலி பதிலுக்கு தாக்க முயன்றார். இதைப்பார்த்த அமைச்சர் மகேஷ், இருவரையும் சமாதானம் செய்தார். இருப்பினும், சண்முகசுந்தரம் மீது விமான நிலையம் போலீசில் ஜாபர் அலி புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், ஜாபர் அலி சகோதரர் ரஹீம் மற்றும் அவரது நண்பர்கள், ஒயர்லெஸ் சாலையில் சண்முகசுந்தரம் நடத்தும் பாத்திரக்கடைக்கு சென்று, அவரை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக சண்முகசுந்தரம் புகார் அளித்தார். இருவரின் புகார் குறித்தும், விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us