தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/சாலை நடுவே தி.மு.க., மேடை; பொதுமக்கள் கடும் அதிருப்தி

சாலை நடுவே தி.மு.க., மேடை; பொதுமக்கள் கடும் அதிருப்தி

சாலை நடுவே தி.மு.க., மேடை; பொதுமக்கள் கடும் அதிருப்தி


ADDED : பிப் 27, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: தி.மு.க., பொதுக்கூட்டத்துக்கு, சாலையின் நடுவே மேடை அமைக்கப்பட்டதால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மணப்பாறை பஸ் ஸ்டாண்ட் அருகே, 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மாவட்ட செயலராக இருப்பதால், பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தனர்.

இதற்காக, மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் சாலையில், ஈ.வெ.ரா., சிலை ரவுண்டானா அருகே, ஒருபுற சாலையை அடைத்து, நேற்று முன்தினம் இரவே மேடை அமைத்தனர். இதனால், சாலையின் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்து நடந்தது.

இந்த சாலையில், 10க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. நகரின் நடுவே ஒருவழிச்சாலை மட்டும் பயன்படுத்தப்பட்டதால், நேற்று காலை முதல் மாலை வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், சரக்கு லாரிகள், பஸ்கள் ஆகியவை அப்பகுதியை கடக்க சிரமப்பட்டன.

ஆளுங்கட்சி கூட்டம் என்பதால், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும், ஒருநாள் கூட்டத்துக்காக, பல ஆண்டுகள் சாலையோரத்தில் நிழலை தந்த மரங்களும் வெட்டப்பட்டன. இதனால், அப்பகுதி மக்கள், தி.மு.க.,வினர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us